ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் - அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிக்கு சீமான் எதிர்ப்பு

முதலில் அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா?ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்.
ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் - அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிக்கு சீமான் எதிர்ப்பு
Published on

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதில், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உதவித்தொகை ரூ.2000 என்ற அ.தி.மு.க.வின் அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

* இலவச பேருந்து வேண்டும் என உங்களிடம் யார் கேட்டது?

* முதலில் அரசு பேருந்துகள் தரமாக உள்ளதா?

* தற்போதைய அரசு பேருந்துகளில் தலைவர்கள் பயணிப்பார்களா?

* ஏற்கனவே கட்டணமின்றி பயணித்த மகளிரை அவமானப்படுத்தினர்.

* எங்கள் தாய்மார்களுக்கு தேவையாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தாருங்கள் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com