அதிமுக பிரமுகர் கொலைக்கு குடும்பத் தகறாரே காரணம் - போலீசார் விளக்கம்

இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இறந்தவர் அவரது கடை வாசலில் மது அருந்திக்கொண்டிருந்த கும்பலை தட்டிக் கேட்டதால் வெட்டி கொலை செய்யபட்டதாக ஒளிபரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது.
அதிமுக பிரமுகர் கொலைக்கு குடும்பத் தகறாரே காரணம் - போலீசார் விளக்கம்
Published on

மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனது டீக்கடை முன்பு இடையூறு அளிக்கும் வகையில் மது போதையில் இருந்தவர்களைத் தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக காலை முழுவதும் தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு மதுரை போலீசார் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இன்று 06.02.2026-ம் தேதி தனசேகரபாண்டியன் என்ற செந்தில் 35, த/பெ முத்து சேர்வை, சாமநத்தம் கிராமம், மதுரை என்பவர் இன்று அதிகாலை 05.30 மணியளவில் சாமநத்தம் நெடுங்குளம் மெயின் ரோடு, அரசு உயர்நிலைப்பள்ளி அருகே செல்வராஜ் என்பவருடைய காம்பளக்ஸில் உள்ள மேற்படி இறந்த தனசேகரபாண்டியன் செந்தில் என்பவரது டீ கடையின் அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் தலையில் வெட்டி கொலை செய்யபட்டுள்ளார்.

மேலும் மேற்படி சம்பவம் தொடர்பாக இன்று 06.02.2026 தொலைக்காட்சிகளில் அவரது டீ கடை வாசலில் மது அருந்திக்கொண்டிருந்த கும்பலை தட்டிக் கேட்டதால் கொலை செய்யபட்டதாக செய்திகள் ஒளிபரப்பபட்டு வருகிறது. மேற்படி சம்பவம் தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் இறந்த நபரின் குடும்ப பிரச்சனையினால் அடையாள தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டடுள்ளார் என்பது தெரியவருகிறது.

இறந்தவர் அவரது கடை வாசலில் மது அருந்திக்கொண்டிருந்த கும்பலை தட்டிக் கேட்டதால் வெட்டி கொலை செய்யபட்டதாக ஒளிபரப்பப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பானது. இச்சம்பவம் அவரது குடும்ப பிரச்சனையின் காரணமாக நடைபெற்றதாக விசாரணையில் தெரிய வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினரால் சட்டப்படி உடனடி மற்றும் சரியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற விபரம் தெரிவித்து கொள்ளபடுகின்றது." என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com