முதல்வரின் வெளிநாட்டு பயணம்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- இபிஎஸ்

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம். தமிழ்நாட்டை ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் போட்டி.
முதல்வரின் வெளிநாட்டு பயணம்: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- இபிஎஸ்
Published on

எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம்.

தமிழ்நாட்டை ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் போட்டி.

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

முதல்வர் முக ஸ்டாலின் 5-வது முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். இந்த வெளிநாட்டு பயணங்களின் மொத்த விளக்கமும் வேண்டும்.

அதிமுக ஆட்சியின் போது முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தன. ஒப்பந்தம் போட்டவுடனேயே தொழில் தொடங்கப்பட்டது போல் பொய் செய்தி.

என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com