கரூரில் எடப்பாடி பழனிசாமி... பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களில் 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கரூரில் எடப்பாடி பழனிசாமி... பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்
Published on

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியானார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களில் 38 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த ஒருவரின் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை குறித்து கேட்டறிந்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com