டெல்லியில் முகாமிடும் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி

சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.
டெல்லியில் முகாமிடும் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி
Published on

சென்னை:

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தை காண செல்ல உள்ளதாக கூறினர்.

இருப்பினும், சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமியின் திடீர் பயணம் கூட்டணி குறித்தாக இருக்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com