தி.மு.க. எதிர்க்கட்சியாக மாறப்போவது வெகு தொலைவில் இல்லை - இ.பி.எஸ்.

தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு... தேர்தல் முடிந்தவுடன் ஒரு பேச்சு... என தி.மு.க. இரட்டை வேடம்.சபாநாயகர் சொல்வது எதுவும் உண்மையில்லை. மரபை மீறுகிறார் சபாநாயகர்.
தி.மு.க. எதிர்க்கட்சியாக மாறப்போவது வெகு தொலைவில் இல்லை - இ.பி.எஸ்.
Published on

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு... தேர்தல் முடிந்தவுடன் ஒரு பேச்சு... என தி.மு.க. இரட்டை வேடம்.

* கேஸ் மானியமாக ரூ.100 தருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தனர், இதுவரை நிறைவேற்றவில்லை.

* மக்கள் பிரச்சனை பற்றி பேச அனுமதி மறுக்கப்படுகிறது. நாங்கள் வெளியேறி பின்னர் முதல்வரை பேச வைத்து சிறுமைப்படுத்துகின்றனர்.

* இன்னும் 9 மாதங்கள்தான் இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் எதிர்க்கட்சியாக மாறப்போவது வெகு தொலைவில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com