2ம் கட்ட சுற்றுப்பயண தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியின் 2-ம் கட்ட சுற்றுப்பயணம் ஆகஸ்டு 8-ம் தேதி விருதுநகரில் நிறைவடைகிறது.வரும் 24-ம் தேதி புதுக்கோட்டை சுந்தர்வ கோட்டையில் 2-ம் கட்ட பயணத்தை தொடங்குகிறார்.
2ம் கட்ட சுற்றுப்பயண தேதியை அறிவித்த எடப்பாடி பழனிசாமி
Published on

முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சி நோக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

முதற்கட்ட சுற்றுப்பயணத்தை கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் கடந்த 7-ம் தேதி தொடங்கினார். விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் முடிவடைந்தது.

சுற்றுப்பயணம், 21-ம் தேதி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய தொகுதிகளில் முதற்கட்ட பிரசாரம் நிறைவுபெறுகிறது.

இந்நிலையில் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்டு 8-ம் தேதி வரை 2-ம் கட்ட பயணத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார்.

அதன்படி, வரும் 24-ம் தேதி புதுக்கோட்டை சுந்தர்வ கோட்டையில் 2-ம் கட்ட பயணத்தை தொடங்குகிறார். புதுக்கோட்டையில் தொடங்கும் சுற்றுப்பயணம் ஆகஸ்டு 8-ம் தேதி விருதுநகரில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com