ஈசிஆர் சம்பவம்- முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசார்

காரில் வந்த பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டி உள்ளனர்.கைது செய்யப்பட்ட 4 பேருக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.
ஈசிஆர் சம்பவம்- முக்கிய குற்றவாளியை கைது செய்த தனிப்படை போலீசார்
Published on

சென்னையை அடுத்த முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த 25-ந் தேதி இரவு இளம்பெண்கள் வந்த காரை, 2 கார்களில் வந்த 8 வாலிபர்கள் சாலையின் குறுக்கே காரை நிறுத்தி வழிமறித்து, அந்த பெண்களை, வீடு வரைக்கும் காரில் பின்தொடர்ந்து விரட்டிச்சென்று மிரட்டி உள்ளனர்.

இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கானத்தூர் போலீசார் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தோஷ், தமிழரசு, அஸ்வின், விஸ்வேஸுக்கு பிப்.14-ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான சந்துருவை தேடி வந்தநிலையில் அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com