சென்னையில் போதைப் பொருள் வேட்டை- இதுவரை 29 வெளிநாட்டினர் கைது

சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை.
சென்னையில் போதைப் பொருள் வேட்டை- இதுவரை 29 வெளிநாட்டினர் கைது
Published on

சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவின் நடவடிக்கையால் வானகரம் பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களோடு தொடர்பில் இருந்த சூடான் மற்றும் நைஜீரியா நாட்டைச்சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, இதுவரை போதைப்பொருள் வழக்குகளில் 29 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மாநகர போலீசார் போதை பொருட்களை தடுப்பதற்கு தொடர் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com