வரதட்சணை கொடுமை: ஆசிரியரை கொடூரமாக தாக்கிய காவல் ஆய்வாளர் பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

காவலர் பூபாலன் தனது மனைவிக்கு வெகு நாட்களாக வரதட்சணை கொடுமை அளித்து வந்தார். அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வரதட்சணை கொடுமை: ஆசிரியரை கொடூரமாக தாக்கிய காவல் ஆய்வாளர் பிடிக்க 3 தனிப்படை அமைப்பு
Published on

மதுரை மாவட்டத்தில் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பூபாலன். இவரது மனைவி தங்கபிரியா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்த நிலையில் காவலர் பூபாலன் தனது மனைவிக்கு வெகு நாட்களாக வரதட்சணை கொடுமை அளித்து வந்தார். இதனால் கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இதில், கணவன் மனைவியிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த பூபாலன் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கி சித்தரவதை செய்துள்ளார்.

இதை தொடர்ந்து பலத்த காயமடைந்த அந்த பெண் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பெயரில், காவலர் பூபாலன், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பூபாலனின் தந்தை செந்தில்குமரன், அவரது மனைவி விஜயா, மகள் அனிதா ஆகிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான காவல் ஆய்வாளர் மற்றும் அவரது தந்தையை பிடிக்க 3 தனிப்படை அமைத்து அவர்களை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com