என்னை சோதிக்காதீர்கள்..! - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை.எம்ஜிஆர்க்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது, கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்ஜிஆர்.
என்னை சோதிக்காதீர்கள்..! - அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
Published on

ஈரோடு மாவட்டம் கோபியில் அதிமுக சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

விழாவில் செங்கோட்டையன் பேசியதாவது:-

அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான், என்னை சோதிக்காதீர்கள்.

அதுதான் எனது வேண்டுகோள் நான் செல்கின்ற பாதை எம்.ஜி.ஆர்., அம்மா வகுத்த பாதை.

அவர்களின் படங்கள் இல்லாததால்தான் விவசாயிகள் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லை.

எத்தனையோ வாய்ப்புகள் வந்தபோதும் நான் மயங்கவில்லை.

எம்ஜிஆர்க்கு வந்த சோதனை யாருக்கும் வந்திருக்காது, கடையெழு வள்ளல்களை மிஞ்சியவர் எம்ஜிஆர்.

எனது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பை நான் கேட்கவில்லை. அவர்களாகவே பந்தோபஸ்து தந்தார்கள்.

அம்மா விரலை நீட்டும் போதே, அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டவன் நான்.

அவர் ஏன் என்னை கழட்டி விட்டார்? என்பதை சொல்ல முடியாத நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com