ரெயில் தண்டவாளம் அருகே பட்டம் விடாதீர்கள்- ரெயில்வே எச்சரிக்கை

உயர் அழுத்த மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது என்பது விளையாட்டல்ல.தண்டவாளம் அருகே பட்டம் விடுபவர்களுக்கு அபராதமும், தண்டனையும் விதிக்கப்படும்.
ரெயில் தண்டவாளம் அருகே பட்டம் விடாதீர்கள்- ரெயில்வே எச்சரிக்கை
Published on

ரெயில்வே தண்டவாளங்கள், மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் தரப்பில் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில்," உயர் அழுத்த மின்சாரப் பாதைகளுக்கு அருகில் பட்டம் விடுவது என்பது விளையாட்டல்ல.. அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் செயல்.

25000 வோல்ட் மின்சாரம் பாயும் கம்பி மீது பட்டம்விடும் நூல் சிக்கினால் பட்டம் விடுபவர் மீது மின்சாரம் பாயும்.

தண்டவாளம் அருகே பட்டம் விடுபவர்களுக்கு 6 மாதம் சிறை அல்லது ரூ.1000 விதிக்கப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com