மத்திய பட்ஜெட் - நாளை மறுநாள் தி.மு.க. எம்.பி.-க்கள் கூட்டம்

முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மத்திய பட்ஜெட் - நாளை மறுநாள் தி.மு.க. எம்.பி.-க்கள் கூட்டம்
Published on

சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கழக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 29-1-2025 புதன்கிழமை காலை 11.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.

கூட்டத்தில், மத்திய அரசின் 2025-26 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதால் கழக மக்களவை- மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com