முதல்வரே விசிலுக்கு வாக்களித்தேன் எனச் சொல்வாரா? விஜய்க்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதில்..!

முதல்வரை எழுப்பி எந்த சின்னத்தில் வாக்களித்தீர்கள் என்று கேட்டால், விசில் சின்னத்திற்கு என்றுதான் கூறுவார்.தூக்கத்தில் இருந்து எழுந்தவர்களால் உடனடியாக பொய்சொல்ல முடியாது.
முதல்வரே விசிலுக்கு வாக்களித்தேன் எனச் சொல்வாரா? விஜய்க்கு டி.கே.எஸ். இளங்கோவன் பதில்..!
Published on

த.வெ.க. கட்சி தொடங்கி 2 ஆண்டுகள் முடிவடைந்து, 3-வது ஆண்டு தொடங்கிய நிலையில் அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அபோது திமுக மற்றும் அதிமுக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

திமுக மற்றும் அதன் கட்சித் தலைவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து பேசுகையில் "2 ஆண்டுகளுக்கு முன்பு, முதல்-அமைச்சர், கட்சி நிர்வாகிகள் நடவடிக்கையால் தூக்கம் வரவில்லை என்று கூறினார்.

என்றைக்காவது ஒருநாள் நன்றாக தூங்கினார் என்றால், அவரை எழுப்பி எந்த சின்னத்தில் வாக்களித்தீர்கள் என்று கேட்டால், விசில் சின்னத்திற்கு என்றுதான் கூறுவார். (Stalin would ask the people to vote for 'whistle' (TVK election symbol) when he was asked in the midst of his deep slumbe). தூக்கத்தில் இருந்து எழுந்தவர்களால் உடனடியாக பொய்சொல்ல முடியாது.

அப்படி இருக்கும் நிலையில், நகர்ப்புறங்களில்தான் த.வெ.க.வுக்கு செல்வாக்கு இருக்கிறது. கிராமப்புறங்களில் இல்லை என்று கூறுகிறார்கள். விசில் சின்னம் ஊதாத ஊரே இல்லை. இங்கெல்லாம் த.வெ.க. இருக்கிறது" என்றார்.

இதற்கு திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கிண்டல் அடிக்கும் தொனியில் பதில் அளித்துள்ளார்.

டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பதிலில் "விஜயால்தான் ஜிடிபி-யில் தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்கிறது. விஜயால்தான் எல்லோரும் கல்வி பெற்று வருகிறார்கள். தமிழ்நாடு மக்களுக்காக அவர் ஏராளமாக செய்திருக்கிறார். விஜய் நிம்மதியாக தூங்கும்போது, மக்களிடம் த.வெ.க.வுக்கு வாக்களிக்கும்படி முதலமைச்சர் கேட்பார் என நினைக்கிறார். என்னவொரு யோசனை" எனக் கிண்டல் அடிக்கும் வகையில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com