மத்திய அரசை கண்டித்து சட்டசபை வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர்.
மத்திய அரசை கண்டித்து சட்டசபை வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்
Published on

பாராளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைத்த திருத்தங்களுடன் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 12 மணி நேர விவாதத்துக்கு பின்னர் நள்ளிரவில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதில் மசோதாவுக்கு 288 ஆதரவாக வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. மட்டுமல்லாமல் தி.மு.க. கூட்டணி கட்சியினரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டசபைக்கு வந்தனர்.

சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். சர்ச்சைக்குரிய சட்டத்திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், சட்டசபை வளாகத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர். வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக பதாகைகளை ஏந்தி தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். மத்திய அரசை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கோஷம் எழுப்பினர்.

* இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே!

* ஒன்றிய அரசே சிறுபான்மையினரை வஞ்சிக்காதே!

* இஸ்லாமியர்களின் கோரிக்கைகளை நிராகரிக்காதே!

என்று வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com