திராவிட மாடல் அரசின் சாதனைகள் - தி.மு.க. பொதுக்குழு பாடல் வெளியீடு

மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 00 அடி உயரத்தில் கொடிக்கம்பமும் நிறுவப்பட்டு, வண்ணமலர்களுடன் செயற்கை நீரூற்றும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.
திராவிட மாடல் அரசின் சாதனைகள் - தி.மு.க. பொதுக்குழு பாடல் வெளியீடு
Published on

மதுரை:

தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உரிய விதிகளின்படி ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டாலும், 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மதுரையில் இன்று நடைபெற இருக்கிறது.

மதுரை உத்தங்குடியில் இதற்காக 90 ஏக்கர் நிலத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. 100 அடி உயரத்தில் கொடிக்கம்பமும் நிறுவப்பட்டு, வண்ணமலர்களுடன் செயற்கை நீரூற்றும் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

இன்று காலையில் தொடங்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க 3,400 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கட்சி தலைமையில் இருந்து தனித்தனியாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதவிர தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக செயல்படும் 23 அணியின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், புதிதாக கொண்டு வரப்பட்ட திட்டங்கள், திராவிட மாடல் அரசின் சாதனைகள், தமிழகத்தின் வளர்ச்சிகளை விளக்கி தி.மு.க. பொதுக்குழு பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com