234 தொகுதிகளிலும் விருப்பமனு பெறும் தே.மு.தி.க.

சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
234 தொகுதிகளிலும் விருப்பமனு பெறும் தே.மு.தி.க.
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

* சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனு பெறலாம்.

* நாளை முதல் பிப்ரவரி 12-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு வழங்கலாம்.

* விருப்ப மனுக்களை வரும் 12-ந்தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

* பொது தொகுதிக்கு விருப்ப மனு கட்டணம் ரூ.15 ஆயிரமாகவும், தனித்தொகுதிக்கு ரூ.10 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com