விடுமுறை தினம், முகூர்த்த நாள் - திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
விடுமுறை தினம், முகூர்த்த நாள் - திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசனம் செய்கின்றனர்.

விடுமுறை நாட்களிலும், திருவிழா காலங்களிலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து முருகனை தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோவில் முன்புள்ள கடலில் புனித நீராடி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் 100 ரூபாய் கட்டணம் தரிசனம், பொது தரிசன வரிசை மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு விஸ்வரூப தீபாராதனை, அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் இன்று மாசி மாத வளர்பிறை முகூர்த்த தினத்தை முன்னிட்டு கோவில் முன்புள்ள சண்முக விலாஸ் மண்டபத்தில் 25-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது. இதனால் கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் மற்றும் திருமணத்திற்கு வந்தவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com