ஞானசேகரனுக்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனை விவரம்...

நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட 200 பக்க தீர்ப்பின் நகலை ஞானசேகரன் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார்.
ஞானசேகரனுக்கு சட்டப்பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட தண்டனை விவரம்...
Published on

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு எந்தெந்த சட்டப்பிரிவின் கீழ் என்ன தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. அவற்றின் விவரம் பின்வருமாறு:-

பி.என்.எஸ். 329 அத்துமீறி அண்ணா பல்கலைக் கழகத்துக்குள் நுழைதல்-3 மாத சிறை தண்டனை.

பி.என்.எஸ். 126(2)-அனுமதியின்றி ஒருவர் மீது பலத்தை பயன்படுத்தி, காயம் ஏற்படுத்துதல்-ஒரு மாத சிறை தண்டனை

பி.என்.எஸ். 87-பெண்ணை கடத்தி துன்புறுத்துதல்-10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம். அபராதம் கட்ட செலுத்த தவறினால், 3 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

பி.என்.எஸ். 127(2)-சட்டவிரோதமாக பிடித்து வைத்து துன்புறுத்துதல்-ஒரு ஆண்டு சிறை தண்டனை

பி.என்.எஸ். 75(2) பாலியல் தொந்தரவு செய்தல்-3 ஆண்டு சிறை தண்டனை

பி.என்.எஸ். 76-நிர்வாணமாகி உடல் ரீதியாக துன்புறுத்துதல்-7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம். அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

பி.என்.எஸ். 64(1) பாலியல் தாக்குதல்-30 ஆண்டுகளுக்கு குறையாமல் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டும். ரூ.25 ஆயிரம் அபராதம். இதை செலுத்த தவறினால் 3மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

பி.என்.எஸ்.351(3)-நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவேன் என்று மிரட்டுதல்-7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம். அபராதம் செலுத்த தவறினால், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

பி.என்.எஸ். 238 (பி) குற்றத்தை மறைத்தல்-3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்- அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனை

தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு 66 இ-ஆபாசமாக படம் பிடித்து பிறருடைய தனியுரிமையை மீறுதல்-3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம். அபராதம் செலுத்த தவறினால், 3 மாதங்கள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

இதனிடையே, நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட 200 பக்க தீர்ப்பின் நகலை ஞானசேகரன் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டார். 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com