ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது "டிட்வா" புயல்

தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல். டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது "டிட்வா" புயல்
Published on

தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல், அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்தது.

டிட்வா புயலின் நகர்வை காரைக்கால் மற்றும் சென்னையில் உள்ள டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை காலை மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com