டிட்வா புயல்: தயாராக இருங்கள்..! அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்த இ.பி.எஸ்.

வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.களத்தில் தயாராக இருக்குமாறு அதிமுக நிர்வாகிகளை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
டிட்வா புயல்: தயாராக இருங்கள்..! அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்த இ.பி.எஸ்.
Published on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"டிட்வா" புயலின் காரணமாக சென்னை, கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புகளுக்கு ஏற்றவாறு உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

புயலின் தீவிரம் உணர்ந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருப்பதை உறுதி செய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள களத்தில் தயாராக இருக்குமாறு அதிமுக நிர்வாகிகளையும், கழக உடன்பிறப்புகளையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com