பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து- கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது. கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்து- கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
Published on

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, விபத்து தொடர்பாக பங்கஜ் சர்மாவை பணிநீக்கம் செய்து தென்னவே ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில், ரெயில்வே கேட்டை மூடாமல் அலட்சியமாக இருந்ததாக கைதான கேட் கீப்பர் பங்கஜ் சர்மா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com