#Gas சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது. சென்னையில் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
#Gas சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
Published on

மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு திடீரென ரூ.60 உயர்த்தி உள்ளது. இதன் மூலம் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஈரான் உடனான போர் பதற்றம் காரணமாக கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாது என கூறிய நிலையில், சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென உயர்த்தியுள்ளது.

இந்நிலையில், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்தியதையை திரும்பப் பெற கோரி சென்னை, குறளகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com