ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தம்பதி பலி

3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர்.சக பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் களம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து தம்பதி பலி
Published on

ஆரணி:

கள்ளக்குறிச்சி மாவட்டம், அய்யனார் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவகண்டன் (வயது37). இவரது மனைவி கலையரசி. இவர்கள் 3 பெண் குழந்தைகளுடன் மும்பையில் தங்கி அங்குள்ள ஓட்டலில் பணிபுரிந்து வந்தனர்.

இந்த நிலையில் அய்யனார் பாளையம் கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மும்பையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மும்பையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டனர்.

இன்று அதிகாலை ஆரணி அடுத்த வடமாதிமங்கலம் பகுதியில் ரெயில் சென்றபோது சிவகண்டன் கதவை திறந்து கதவு முன்பு நின்று வேடிக்கை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஓடும் ரெயிலில் இருந்து சிவகண்டன் கால் தவறி கீழே விழுந்தார். இதனை பார்த்த அவரது மனைவி கலையரசி கணவனை காப்பாற்ற முயன்றார்.

அப்போது 2 பேரும் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

இதைபார்த்த சக பயணிகள் மற்றும் அந்த பகுதி மக்கள் களம்பூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். மேலும் தகவலறிந்து வந்த காட்பாடி ரெயில்வே போலீசார் சிவகண்டன், கலையரசி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com