LPG Shortage | தொடரும் எரிவாயு தட்டுப்பாடு: சென்னையில் 2-வது நாளாக முடங்கிய ஆட்டோக்கள்

கியாசில் ஓடக்கூடிய ஆட்டோக்கள் தட்டுப்பாடு காரணமாக நேற்று முதல் ஓடவில்லை.ஓடக்கூடிய ஆட்டோக்கள் சென்னையில் ஓடாததால் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
LPG Shortage | தொடரும் எரிவாயு தட்டுப்பாடு: சென்னையில் 2-வது நாளாக முடங்கிய ஆட்டோக்கள்
Published on

ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டதால் பல்வேறு சிரமங்களுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதவிர ஆட்டோ டிரைவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கியாசில் ஓடக்கூடிய ஆட்டோக்கள் தட்டுப்பாடு காரணமாக நேற்று முதல் ஓடவில்லை. இன்று 2-வது நாளாக பிரச்சினை அதிகரித்தது.

எல்.பி.ஜி. கியாஸ் மூலம் ஓடக்கூடிய 30 ஆயிரம் ஆட்டோக்கள் சென்னையில் உள்ளன. இந்த ஆட்டோக்கள் ஓட்ட முடியாமல் முடங்கியுள்ளன. கியாஸ் நிரப்பக்கூடிய பங்குகளில் கியாஸ் இல்லாததால் வேறு வழியில்லாமல் ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டனர். எல்.பி.ஜி. கியாஸ் ஓடக்கூடிய ஆட்டோக்கள் சென்னையில் ஓடாததால் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து ஆட்டோ தொழிற்சங்க தலைவரும் டிரைவருமான பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

சென்னையில் எல்.பி.ஜி. கியாசில் ஓடக்கூடிய ஆட்டோக்கள் கணிசமாக உள்ளன. ஆனால் போதுமான கியாஸ் நிரப்பும் பங்குகள் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள கியாஸ் தட்டுப்பாட்டால் ஆட்டோக்களுக்கு கியாஸ் நிரப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல பங்குகள் கியாஸ் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து கியாஸ் நிரப்ப வேண்டிய நிலை உள்ளது.

கியாஸ் தட்டுப்பாட்டால் ஆட்டோக்கள் முழுமையாக ஓட்ட முடியவில்லை. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com