Gas Shortage | வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு - பார்சல் டீ, காபி விலை உயர்வு

சில ஓட்டல்களில் விறகு அடுப்பு கட்டும் பணியும் நடந்து வருகிறது.ஒரு சில ஓட்டல்கள் விறகு அடுப்பில் சமைக்க தொடங்கி விட்டனர்.
Gas Shortage | வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு - பார்சல் டீ, காபி விலை உயர்வு
Published on

சேலம்:

அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் கியாஸ், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஓட்டல்கள், டீ கடைகள், பேக்கரிகள் மூடும் நிலை உருவாகி உள்ளது.

இந்த நிலையில் ஒரு சில ஓட்டல்கள் விறகு அடுப்பில் சமைக்க தொடங்கி விட்டனர். சில ஓட்டல்களில் விறகு அடுப்பு கட்டும் பணியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் சேலத்தில் உள்ள பெரும்பாலான டீக்கடைகளில் இன்று முதல் திடீரென டீ, காபி விலை உயர்ந்துள்ளது. அதன்படி அரை பார்சல் டீ இதுவரை ரூ. 20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.10 அதிகரித்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு பார்சல் டீ இதுவரை ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் ரூ.10 அதிகரித்து ரூ. 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் ஒரு சில கடைகளில் பலகாரங்கள் விலையும் அதிகரித்துள்ளனர். இது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியும் வகையில் டீக்கடைகள் முன்பு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com