கோவை பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேரையும் 19-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கைதான 3 பேர் மீதும் 6 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
3 பேரிடமும் விசாரணை நடத்த கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நீதிபதி அப்துல் ரகுமான்
3 பேரிடமும் விசாரணை நடத்த கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த நீதிபதி அப்துல் ரகுமான்
Published on

கோவை:

மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி ஒருவர் கோவையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது காதலனுடன் காரில் விமான நிலையத்தின் பின்புறம் பிருத்தாவன் நகர் காட்டுப்பகுதியில் பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சதீஷ் என்ற கருப்புசாமி, கார்த்திக் என்ற காளீஸ்வரன், மதுரையை சேர்ந்த குணா என்ற தவசி ஆகிய 3 பேர் காதலனை அரிவாளால் வெட்டி விட்டு மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் பலத்காரம் செய்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அவர்கள் 3 பேருக்கும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான 3 பேர் மீதும் 6 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 3 பேரிடமும் கோவை நடுவர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரகுமான், நேற்று இரவு நேரில் சென்று, ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் 3 பேரையும் வருகிற 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போலீசாருக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com