காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.வாலாஜா சாலையில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
Published on

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் நினைவிடத்தில் மலர் போர்வை அணிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com