முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக்கூட்டம்

தலைமை செயலகத்தில் இன்று காலை பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று துறைசார் ஆய்வுக்கூட்டம்
Published on

தமிழக அரசின் நலத்திட்டங்களை விரைவாக மக்களிடம் கொண்டு சேர்ப்பது குறித்து பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

நெடுஞ்சாலை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை, உணவுத்துறை மற்றும் கூட்டுறவு துறை ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் துறை அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com