சிந்துவெளி எழுத்து முறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு- மு.க.ஸ்டாலின்

சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு உலகை ஈர்த்துள்ளது. கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.
சிந்துவெளி எழுத்து முறையை புரிந்துகொள்ள வழிவகை செய்தால் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு- மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார். இதன்பின் சிந்துவெளி பண்பாட்டை கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த இந்திய தொல்லியல் கழகத்தின் மேனாள் இயக்குநர் சர் ஜான் மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

* தமிழகத்தில் அமைந்துள்ள ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு.

* சிந்துவெளி பண்பாடு தொடர்பான கருத்தரங்கு இந்தியாவில் வேறு எங்கும் நடைபெறவில்லை.

* சிந்துவெளி நாகரீகத்தில் திராவிட மொழி பேசப்பட்டிருக்காலம் என கூறப்பட்டது.

* சிந்துவெளி நாகரீகம் முதன் முதலில் 1924-ம் ஆண்டு உலகுக்கு அறிவிக்கப்பட்டது.

* சிந்துசமவெளி நாகரீகத்தை உலகிற்கு எடுத்துக்காட்டியவர் சர் ஜான் மார்ஷல்.

* 1948-ம் ஆண்டு காலத்தில் சிந்துவெளி அடையாளங்களை வெளிகொண்டு வந்தவர் அண்ணா.

* செம்மொழி மாநாட்டில் சிந்துவெளி நாகரீகத்தை அடையாளப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி.

* சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு உலகை ஈர்த்துள்ளது.

* கீழடியைப் போலவே பொருணையிலும் அருங்காட்சியக பணிகள் நடைபெற்று வருகின்றன.

* சிந்துவெளி அகழ்வாராய்ச்சி பணிகள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

* சிந்துவெளி குறியீடுகளும், கீழடி குறியீடுகளும் 60 சதவீதம் ஒத்துப்போகின்றன.

* சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்படும்.

* கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

* தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com