ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாபெரும் தமிழ்க் கனவு! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு

நாளை முதல் மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் தொடங்குகிறது.அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!
ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மாபெரும் தமிழ்க் கனவு! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு
Published on

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

சமூகச் சமத்துவம், தமிழ் மரபு, தமிழர் தொன்மை, பண்பாட்டுச் செழுமை, மொழி முதன்மை, இலக்கிய வளமை, கலைப் பன்மை, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இளைய தலைமுறையினருக்குக் கடத்துவதே திராவிட மாடல் அரசின் தலையாய கடமை!

50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 லட்சம் மாணவர்களுடன் நாளை (ஆகஸ்ட் 6) முதல், மாபெரும் தமிழ்க் கனவின் 3-ஆம் கட்டம் தொடங்குகிறது.

அறிவை விரிவு செய்து அகண்டமாக்குவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் உயர்வோம்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com