உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷ்-க்கு முதலமைச்சர் வாழ்த்து

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டியில் கார்ல்சென்னை குகேஷ் வீழ்த்தினார்.இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணம்.
உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக வீரர் குகேஷ்-க்கு முதலமைச்சர் வாழ்த்து
Published on

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், மாக்னஸ் கார்ல்சென் உடன் மோதினார். இந்த ஆட்டத்தில் மாக்னஸ் கார்ல்சனை குகேஷ் இறுதிவரை போராடி வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் குகேஷ் 8.5 புள்ளிகளுடன் போட்டிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். மேலும், முதல் 2 இடத்தில உள்ள கார்ல்சன் மற்றும் அமெரிக்க வீரர் ஃபேபியானோ ஆகியோரை விட குகேஷ் ஒரு புள்ளி மட்டுமே பின்தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குகேஷ்-க்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்த குகேஷ்-க்கு வாழ்த்துக்கள். இந்திய சதுரங்கத்திற்கு ஒரு பெருமைமிக்க தருணம் மற்றும் சதுரங்க விளையாட்டில் மேலும் ஒரு மைல்கல் சாதனையை நிகழ்த்தியுள்ளார் என முதலமைச்சர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com