8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை:

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், இன்று காலை 10 மணிவரை 8 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, திருப்பூர், கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com