

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் இரட்டை யானை இடம் பெற்றுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி யானை சின்னத்தை பயன்படுத்தி வருகிறது. இதனால் விஜய் கட்சியின் கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடைவிதிக்கக்கோரி பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச் செயலாளர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சின்னத்தை யாரும் பயன்படுத்த முடியாது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.