அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு- நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்

உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.ரூ.25 லட்சம் பிணை தொகையுடன் இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு- நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
Published on

தமிழக அமைச்சரான செந்தில் பாலாஜியை சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனால் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

சுமார் 471 நாட்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் 26-ந்தேதி ஜாமின் வழங்கியது.

இதனால் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு ஜாமின் வழங்கியதை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றம் மறுசீராய்வு மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரத்தில் 2 நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ரூ.25 லட்சம் பிணை தொகையுடன் இரு நபர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், அமைச்சர் செந்திநல் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இதில், அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், உதவியாளராக இருந்த சண்முகம் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com