சிவகங்கை பேருந்து விபத்து: மருத்துவமனைகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை பேருந்து விபத்து: மருத்துவமனைகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைப்பு- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் 3 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர்," 19 ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com