கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை- வித்தியாசமான விளம்பரம்

விளம்பரத்தில் பெற்றோர் பிள்ளைகளின் சுயவிவரக் குறிப்பை அளிப்பர். சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற அறிவிப்பு பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை- வித்தியாசமான விளம்பரம்
Published on

திருமண வயதை அடைந்த மகனுக்கோ, மகளுக்கோ வரன் தேடுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு, நல்ல மணவாழ்க்கை அமைத்து தர பெற்றோர் படும்பாடு சொல்லி மாளாதவை. அவர்களுக்கு ஏற்றவாறு நிறம், வயது, கல்வித் தகுதி, சமூகம், பொருத்தம், வசதி உள்ளிட்டவற்றை பார்த்து பேசி முடித்து திருமணம் முடிப்பது என்பது அப்பப்பபா...

வரன்களை தேடி அலையும் பெற்றோர்களின் சுமையை குறைக்க இன்றைய காலக்கட்டத்தில் மேட்ரிமோனிகள், திருமண தகவல் மையம், பத்திரிகைகளில் மணமகன், மணமகள் தேவை என்று விளம்பரப்படுத்தும் நடைமுறை உள்ளது. இதற்காக பெற்றோர் பிள்ளைகளின் சுயவிவரக் குறிப்பை அளிப்பர். அதில் பெரும்பாலும் வயது, நிறம், கல்வித் தகுதி, சமூகம் என்று காணப்படும். ஆனால் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் மணமகள் தேவை என்ற விளம்பரம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த விளம்பரத்தில் கொங்கு வேளாள கவுண்டர் இனத்தை சேர்ந்த படித்த வசதியான வரனுக்கு அதே இனத்தை சேர்ந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ளாத மணமகள் தேவை என்று தொடர்பு எண்ணுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்ட பலரும் ஆச்சரியத்துடன் 'என்னப்பா இது' என்று சொல்ல வைக்கிறது.

கொரோனா அதிகரித்த நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com