

தைப்பொங்கல் திருநாளான இன்று உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 1,100 காளைகளும் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.
11 சுற்றுகளாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.
ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிவில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்தி 19 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்துள்ளார்.
குன்னத்தூரை சேர்ந்த அரவிந்த் திவாகர் 15 காளைகளை அடக்கி 2 ஆம் இடம் பிடித்துள்ளார். திருப்புவனம் முரளிதரன் 13 காளைகளை அடக்கி 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
19 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த கார்த்திக்கு நிஸான் கார் பரிசாக வழங்கப்பட்டது. 15 காளைகளை அடக்கி 2 ஆம் பிடித்து அரவிந்த் திவாகருக்கு ஹோண்டா ஷைன் பைக் பரிசாக வழங்கப்பட்டது.