வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை- விஜய் வசந்த் எம்.பி

காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலக கட்டிடம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்துள்ளார்.பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.
வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை தேவை- விஜய் வசந்த் எம்.பி
Published on

கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய அலுவலக கட்டிடம் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைத்துள்ளார்.

இதேபோல், மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு கல்வெட்டு சேதம் அடைந்ததை தொடர்ந்து மீண்டும் அதே இடத்தில் புதிதாக கல்வெட்டு நிறுவப்பட்டுள்ளது.

இகுதுறித்து கன்னியாகுமரி தொகுதி எம்பி விஜய் வசந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில், "குறுகிய காலத்தில் இந்த கல் வெட்டினை மீண்டும் அமைத்தற்காக தமிழ்நாடு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

குமரியின் மேற்கு பகுதியின் உயர்வான ஊர்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு சிற்றாறு அணையிலிருந்து நீர் கொண்டு செல்ல வேண்டும் என்ற பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் தொலைநோக்கு பார்வையில் கணியான் பாறை என்ற மலையும், கூட்டுவாவுப்பாறை என்ற மலையையும் இணைத்து இரண்டு மலைகளுக்கும் நடுவில் கட்டப்பட்டுள்ள அதிசயம் தான் மாத்தூர் தொட்டிப்பாலம்.

கர்ம வீரரின் கனவு திட்டத்தை நினைவு கூரும் வகையில் இந்த கல்வெட்டு மீண்டும் அங்கு பதிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்" என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com