தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு

சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கட்சி தலைவர் விஜய் தலைமையில் நடைபெற உள்ளது.கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிப்பு
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு கூட்டமானது மார்ச் மாதம் 28ஆம் தேதி (28.03.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்கு, சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில், கழக விதிகளின்படி, கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் பொதுக்குழுவில் கலந்துகொள்வதற்கான அழைப்புக் கடிதம் மின்னஞ்சல், வாட்ஸ் ஆப் மற்றும் தபால் வாயிலாக அனுப்பப்பட்டிருக்கிறது.

பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்புக் கடிதம் மற்றும் தலைமைக் கழகத்தின் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வருகை தந்து இப்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com