பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு, பாகுபாட்டை ஒழிக்க உறுதி ஏற்போம்- அண்ணாமலை

தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்ற இந்த நாளில் உறுதி ஏற்போம்.
பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு, பாகுபாட்டை ஒழிக்க உறுதி ஏற்போம்- அண்ணாமலை
Published on

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெண்களின் சுதந்திரத்தையும், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளையும் அங்கீகரித்துப் போற்றவும், பெண்களுக்கு எதிரான ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாட்டை ஒழிக்கவும், சமூகத்தைப் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாற்றவும், இந்த நாளில் உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com