தீபத்தூணில் தீபமேற்ற உறுதி- அண்ணாமலை

“கந்த சஷ்டி கவசம்” பாடி முருகனை போற்றுவோம். முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம்.
தீபத்தூணில் தீபமேற்ற உறுதி- அண்ணாமலை
Published on

சென்னை:

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து கூறியிருப்பதாவது:-

சக்திவேல் ஏந்திய குமரனுக்கு உகந்த திதியான சஷ்டியும், கந்தனுக்கு உகந்த நட்சத்திரமான கார்த்திகையும் இணைந்துள்ள இன்றைய நாளில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று "கந்த சஷ்டி கவசம்" பாடி முருகனை போற்றுவோம்.

அனைவரின் இல்லங்களிலும், உள்ளங்களிலும் கந்த சஷ்டி கவசம் பாடி, முருகப்பெருமானின் பேரருள் உலக மக்கள் அனைவருக்கும் கிடைத்திட மனதார பிரார்த்திப்போம் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக வருகிற 2-ந்தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. சதுர்த்தியும், கிருத்திகையும் இணைந்து வரும் இன்று முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com