வட இந்திய சகோதர, சகோதரிகளை அமைச்சர் அன்பரசன் அவமானப்படுத்தியதாக அண்ணாமலை கண்டனம்

மத்திய அரசு கூறியபடி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் 1 அல்லது குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.வட இந்தியாவில் உள்ளவர்களோ பன்னி குட்டி போடுவதை போல குழந்தைகளை பெற்று மக்கள் தொகையை உயர்த்தினர்.
வட இந்திய சகோதர, சகோதரிகளை அமைச்சர் அன்பரசன் அவமானப்படுத்தியதாக அண்ணாமலை கண்டனம்
Published on

வட இந்திய சகோதர, சகோதரிகளை அவமானப்படுத்தும் விதமாக அமைச்சர் அன்பரசன் பேசியதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கூறியபடி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் 1 அல்லது குழந்தைகளை பெற்றுக் கொண்டனர். ஆனால் வட இந்தியாவில் உள்ளவர்களோ பன்னி குட்டி போடுவதை போல குழந்தைகளை பெற்று மக்கள் தொகையை உயர்த்தினர் என்று அமைச்சர் அன்பரசன் பேசியுள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக கூட்டத்தில் அமைச்சர் அன்பரசன் பேசிய வீடியோவை தனது எக்ள் தள பக்கத்தில் பதிர்ந்துள்ள அண்ணாமலை பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், " தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

எல்லை நிர்ணயம் குறித்த தனது மாயையான நாடகத்தை நடத்தும்போது, திமுக அமைச்சர் த.மு. அன்பரசனின் இந்த உரையை தனது இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டாளிகளுக்கு அவர் ஒளிபரப்புவார் என்று நம்புகிறோம்.

இது வட இந்திய சகோதர சகோதரிகளை அவமதிக்கவும் துஷ்பிரயோகம் செய்யவும் திமுக அமைச்சர்கள் கூட்டு முடிவை எடுத்தது போல் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com