வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் உறுதியாகியுள்ளது: அண்ணாமலை

குற்றவாளி மற்றொரு நபருடன் தொலைப்பேசியில் பேசியதாக மாணவி கூறியதாக தகவல்.அதற்கு நேர்மாறாக குற்றவாளி தனது மொபைல் போனை ஏரோப்ளேன் Mode-ல் வைத்திருந்ததாக போலீசார் தகவல்.
வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் உறுதியாகியுள்ளது: அண்ணாமலை
Published on

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்குள்ளான வழக்கில், குற்றவாளி மற்றொரு நபருடன் தொலைப்பேசியில் பேசியதாக, பாதிக்கப்பட்ட மாணவி கூறிய தகவலுக்கு நேர்மாறாக, குற்றவாளி தனது மொபைல் போனை, ஏரோப்ளேன் முறையில் வைத்திருந்ததாக, சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கிற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவி, தான் கூறிய தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில், காவல்துறை ஈடுபட்டு வருகிறதோ என்ற சந்தேகம் தற்போது உறுதியாகியுள்ளது. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வழக்கு விசாரணை சரியான திசையில் செல்கிறதா என்ற கேள்வி வலுப்படுகிறது.

இவ்வாறு அந்த பதவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com