புதுச்சேரி அரசு ஒப்பந்த ஆசிரியர்கள் 292 பேரை பணி நியமனம் செய்ய வேண்டும் - அன்புமணி

தினக்கூலி அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. கவுரவ ஆசிரியர்களாக பணியாற்றும் 292 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள்.
புதுச்சேரி அரசு ஒப்பந்த ஆசிரியர்கள் 292 பேரை பணி நியமனம் செய்ய வேண்டும் - அன்புமணி
Published on

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

புதுவை அரசின் பள்ளிக்கல்வித்துறையில் கவுரவ விரிவுரையாளர்கள், கவுரவ பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பால சேவிகா ஆசிரியர்களாக பணியாற்றி வரும் 292 பேர் தங்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்குக் கூட புதுவை அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட்டு, இட ஒதுக்கீட்டு முறைகளை பின்பற்றி, முறையான ஆள்சேர்ப்பு விதிகளின்படி ஒப்பந்த அடிப்படையிலும், தினக்கூலி அடிப்படையிலும், தற்காலிக அடிப்படையிலும் நியமிக்கப்பட்டவர்களை பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தீர்ப்புகளில் உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

கவுரவ ஆசிரியர்களாக பணியாற்றும் 292 பேரும் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள். 292 கவுரவ ஆசிரியர்களையும் பணி நிலைப்பு செய்ய புதுவை அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com