பாலாற்றில் கழிவு நீர்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சுற்றுசூழலை பாதுகாக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும். ‘மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும்.
பாலாற்றில் கழிவு நீர்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
Published on

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பாலாற்றில் தோல் தொழிற்சாலைகளால் கலந்து விடப்படும் தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்களுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் கடந்த 2001, 2009 ஆகிய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட இழப்பீட்டை அடுத்த 6 வாரங்களில் வழங்க வேண்டும்;

தோல் தொழிற்சாலைகளில் இருந்து திறக்கப்படும் கழிவு நீரால் பாலாறு மற்றும் வேலூர் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல் கண்காணிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

எனவே, இனியும் தாமதிக்காமல் தோல் தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக நீதி வழங்க வேண்டும். உச்சநீதிமன்ற ஆணைப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், அதற்கான தொகையை 'மாசுபடுத்துபவரே இழப்பீடு செலுத்த வேண்டும்' என்ற தத்துவத்தின் அடிப்படையில் தோல் தொழிற்சாலைகளிடமிருந்து வசூலிக்க வேண்டும். சுற்றுசூழலை பாதுகாக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com