தாம்பரம் விமானப்படை தளத்தின் தலைவராக ஏர் கமாடோர் தபன் சர்மா பதவியேற்பு

2,500 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். போர் விமானியாக நியமிக்கப்பட்டார்.
தாம்பரம் விமானப்படை தளத்தின் தலைவராக ஏர் கமாடோர் தபன் சர்மா பதவியேற்பு
Published on

தாம்பரம் விமானப்படை தளத்தின் புதிய தலைவராக ஏர் கமாடோர் தபன் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டார். இதையொட்டி சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. தலைமை மாற்றத்தைக் குறிக்கும் வகையில் இந்த நிகழ்வு முழு மரியாதையுடனும் இராணுவ மரபுகளை பின்பற்றி நடத்தப்பட்டது.

ஏர் கமாடோர் தபன் சர்மா டிசம்பர் 1997-ம் ஆண்டு இந்திய விமானப் படையின் பறக்கும் பிரிவில் போர் விமானியாக நியமிக்கப்பட்டார். அவர் ஏ வகை தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளர் ஆவார். மேலும், தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பணியாளர் சேவைகள் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார்.

இந்திய வான்படையின் பல்வேறு வகையான விமானங்களில் 2,500 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். தனது 25 ஆண்டுகால வாழ்க்கையில், இரண்டு போர் விமான ஸ்குவாட்ரன்கள், விமானப்படையின் விமானப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றுக்கு தலைமை வகித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com