காந்திக்கு பின் இந்த நாட்டை புரிந்துகொண்ட ஒரே நபர் பிரதமர் மோடி தான்! - ஆளுநர் ரவி பேச்சு

25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்மொழி என்ற பெயரில் மக்களிடையே தடைகளை உருவாக்கியது துரதிர்ஷ்டவசமானது.
காந்திக்கு பின் இந்த நாட்டை புரிந்துகொண்ட ஒரே நபர் பிரதமர் மோடி தான்! - ஆளுநர் ரவி பேச்சு
Published on

சென்னை ராஜ்பவனில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிறுவன தினக் கொண்டாட்டத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் வறுமையைக் குறைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வறுமை 30 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது சர்வதேச அமைப்புகளின் கூற்றுப்படி, 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போதைய வறுமை நிலை 6 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

தேசத்தின் உணர்வை, பாரதத்தின் இதயத்துடிப்பை புரிந்துகொண்ட ஒரு தலைமை நமக்குக் கிடைத்துள்ளது. மகாத்மா காந்திக்குப் பிறகு, இந்த நாட்டை மிக நன்றாகப் புரிந்துகொண்டவர் பிரதமர் நரேந்திர மோடிதான் என்று நான் உறுதியுடன் சொல்கிறேன்.

அனைவரும் பாரதத்தை ஒரு குடும்பமாகக் கருத வேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு, மொழி என்ற பெயரில் மக்களிடையே தடைகளை உருவாக்கியது துரதிர்ஷ்டவசமானது.

மாநில தினம் கொண்டாடுவது என்பது அந்தந்த மாநிலத்தின் கலாச்சாரத்தைப்கொண்டாடுவதற்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. இதுவே 'ஏக் பாரத் ஷ்ரேஷ்டா பாரத்' (ஒரே இந்தியா, சிறந்த இந்தியா)" என்று தெரிவித்தார்.     

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com