எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு - புத்தாண்டு வாழ்த்து பெற்றனர்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஏராளமானோர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.தன்னை சந்தித்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி திருப்பதி காலண்டர் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.
எடப்பாடி பழனிசாமியுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு - புத்தாண்டு வாழ்த்து பெற்றனர்
Published on

சென்னை:

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை அடையாறில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள் ஏராளமானோர் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், கே.பி.அன்பழகன், டி.ஜெயக்குமார், கருப்பண்ணன், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி, பா.வளர்மதி, கோகுல இந்திரா உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், ஒன்றிய செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் வந்திருந்து வாழ்த்து தெரிவித்தனர்.

தன்னை சந்தித்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி திருப்பதி காலண்டர் வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com