கானத்தூர் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க தி.மு.க. கொடி என்னும் 'லைசன்ஸ்' தடுக்கிறதா?- அ.தி.மு.க.

குற்றவாளிகள் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடாதது ஏன்? கார் நம்பர் தெரிந்துவிட்டது. ஆனால் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?
கானத்தூர் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க தி.மு.க. கொடி என்னும் 'லைசன்ஸ்' தடுக்கிறதா?- அ.தி.மு.க.
Published on

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்கள் மீது தாக்குதல் நடந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

புகாரளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை வெளியிட்ட ஸ்டாலின் மாடல் அரசு, குற்றவாளிகள் பெயர் உள்ளிட்ட எந்த விவரமும் வெளியிடாதது ஏன்?

அவர்கள் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. கார் நம்பர் தெரிந்துவிட்டது. ஆனால் யாரென்று இன்னும் கண்டுபிடிக்கவில்லையா?

அல்லது, விவரங்களை வெளியிடவோ, மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவோ திமுக கொடி என்னும் "லைசன்ஸ்" தடுக்கிறதா? என்று தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com